கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு


திம்புலகல, கெகுலுவெலவில் கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர்சுத்திகரிப்பு நிலையம் கடந்த தினம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந்த தொடர்புடைய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் அனுசரணையிலும், திம்புலகல பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய கடற்படையின் தொழிலாளர் உதவியுடனும் நிறுவப்பட்டன.

கெகுலுவெல கிராமத்தை மையமாகக் கொண்ட இந்த மறுமலர்ச்சி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கனிக்ஷ்ட அதிகாரிகள், கடற்படை வீரர்கள் உட்பட பல உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டங்கள் மூலம், கெகுலுவெல, கனிச்சகல மற்றும் மல்தெனிய கிராமங்களில் உள்ள சுமார் 1575 குடும்பங்கள் தங்களது அன்றாட குடிநீர் தேவைகளை சுகாதாரமான முறையில் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக இருக்கும் கடற்படை, மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தொடர்ந்து நிறுவும் என கடற்படை தெரிவித்துள்ளது.

Post a Comment

We feel free to here your feedback to develop us!
So, do not Hesitate to COMMENT

Previous Post Next Post

Featured post

Filmora 9 Registration Code + License Key and Email 2020

Translate

Contact Form